யாழ்ப்பாணத்தின் மற்றைய இடங்களுடன் நோக்குமிடத்து, வல்வெட்டித்துறைப் பிரதேசமானது குறிப்பிடக்கூடிய நெருக்கலான வீடுகளை சிறிய நிலப் பரப்புகளுக்குள் கொண்டுள்ளது. குடும்பங்கள் பல்கிப் பெருகியுள்ள இன்றைய நிலையில், ஒரு கல்யாண வைபவத்தையும் மற்றும் அதனுடன் கூடிய சபையையும், சில 100 குடும்பங்களை அழைத்து மேற்கொள்வது என்பது மிகவும் அசெளகரியமாக மாறியுள்ளது.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேத வைத்திஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 15 ஆம் நாளான இன்று, தேர் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வருடத்தில் பொதுவாக அதிகளவு பக்தர்கள் பங்குகொள்ளும் நிகழ்வு இதுவாகும்.
நல்லவை பல புரிந்து நம்மை அணைத்திற்கும் அருளாளன்
தம் கருணை வெள்ளத்தில் எம்மை ஆழ்த்தி நிற்கும் தங்காளன்
தொல்லை பல எமக்குற்ற போதும் எமைக்காத்து நிற்கும் நம்பன் -----கவிதை - திரு.வ.ஆ.அதிரூபசிங்கம்.
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட அணிக்கு 9 பேர் பங்குபெறும் உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டங்கள் 24/3/2013 அன்று மாலை வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
வாசகர்களின் தரமான தமிழ் மனம் வீசும் கவிதைகளை எமது இணையத்தில் நிரந்தரமாகப் பதிவாக்கிக் கொள்ளும் நோக்குடனும், மற்றும் கவிதாசிரியர்களின் கவிதைகள் பல பாகங்களிலுமுள்ள பலரையும் சென்றடைவதற்காகவும், தமிழ் வளர்ச்சிக்கு நாம் செய்யும் சிறிய முயற்சி எனக் கருதியும், எமது இணையதளத்தில் 'கவிதைகள் ' (Poems) எனும் புதிய பகுதியை உருவாக்கியுள்ளோம்.
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட அணிக்கு 9 பேர் பங்குபெறும் உதைப்பந்தாட்டச்சுற்றுப் போட்டியின் அறையிறுதியாட்டங்கள் 22/3/2013 அன்று மாலை வல்வை சிதம்பரக் கல்லூரி மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றன.
இங்கிலாந்தில் வாழும் எம் இன மாணவர்களின் கணித, எண்ண வளர்ச்சிக்காக கணிதப் போட்டி - 2013 (Mathematics Challenge - 2013) எதிர்வரும் 15 ஜூன் 2013 அன்று நடைபெறவுள்ளது.
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கல்யாண மண்டபத்தின் அடிக்கல் நாட்டும்விழா 23/11/2012 அன்று நடைபெற்றது. இக்கல்யாண மண்டபத்தின் கட்டிட வேலைக்கான நிதி உதவியை வல்வைப் பொது மக்களிடமும், வல்வை சார் சர்வதேச பொது அமைப்புக்களிடமும், புலம்பெயர்ந்து வாழும் வல்வை மக்கள்டமிருந்தும் வல்வை முத்துமாரி அம்மன் தேவஸ்தான தர்மகர்த்தா சபையினர் எதிர்பார்க்கின்றனர்.
வல்வையில் துரிதமாக நடைபெற்று வரும் வடக்கு கிழக்கு உள்ளுராட்சி முன்னேற்றத்திட்டத்தின் ( NEL SHP) வேலைத்திட்டங்களை நேற்று உலக வங்கியின் உயர் மட்ட குழுவினர் பார்வையிட்டு சென்றனர்.
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஆகமச்சித்திரங்கள் பாகம் -7 (சிவ மூர்த்தங்களும், சிவ தத்துவங்களும்) என்ற நூல் நேற்று வெளியிடப்பட்டது. இந் நூல் வெளியீடு வில்லிசை சக்கரவர்த்தி கலைமாமணி டாக்டர்.சிவஸ்ரீ.சோமாஸ்கந்த குருஜி (கனடா) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலயத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேர்கள் வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் கட்டுத்தேர் அம்பாளுக்கும், சித்திரத்தேர் பிள்ளையார்மற்றும் முருகனுக்குமாக செய்யப்பட்டுள்ளது.
பண்பிலும், பாரம்பரியத்திலும் பாரினையே வியக்க வைத்த பெருமையும் நமக்குண்டு. எம் கலைஞர்களின் பல நாடகங்களும் ,காத்தவராயன் கூத்துக்களும் காவியங்களாக மாறி சாதனைகள் படைத்த பெருமையும் எமது ஊரில் தான். எதற்கும் குறைவில்லாத எமது ஊரில், கடந்த மூன்று வருடங்களாக தை மாதத்து முதல்நாளில் எமது மன்றம் கலைப்பெருவிழா நடாத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.
தொண்டமானாறு தச்சன் கொல்லை சித்தி விநாயகர் ஆலயத்தின் எண்ணைக்காப்பு நேற்றுகாலை
8 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது. இன்று திருக்கோயில் புனனாவர்த்தன அஸ்டபந்தன பஞ்ச குண்டல திதிதல ராஜ கோபுர மகாகும்பாபிஷேகம் 9.45 மணிமுதல் 10.47 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் நடைபெறவுள்ளது.
பருத்தித்துறை நகரசபையின் புதிய மாடிக் கட்டிடம், பொது நூலகம் ஆகியவை 18ம் திகதி முதல் புதிய கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியுள்ளன. போர்க்காலத்துக்கு முன்னர் பருத்தித்துறை கடற்கரை வீதியில் இருந்த பருத்தித்துறை நகரசபை அலுவலக கட்டடம் முற்றாக சேதமடைந்திருந்தது.
Dr. மயிலேறும் பெருமாள் உடலுக்கு மட்டும் அல்ல, உளவளத்துணையும் மக்கள் ஆதரவுடன் சபைகள் அமைத்து தலைவனாக இருந்து ஆன்மீக வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டுக்கும், அளப்பரிய சேவை ஆற்றுகிறார். கல்வி, விளையாட்டு புதிய ஆக்கங்களுக்கு ஊக்கம் அளித்து அவர்களுக்கு சபை மூலம் பரிசுகளும் வழங்கி முன்னேற்றத்திற்கு வழி வகுத்து வருகிறார்.
இமையாணன் மத்திய விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்டுவரும் நேற்றைய உதைபந்தாட்ட போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகம் தோல்வி அடைந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகத்தை (Valvai sport club ) எதிர்த்து அல்வாய் மனோகரா விளையாட்டுக்கழகம் ( Alvai Manokara sport club ) மோதியது.
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியசாலை அபிவிருத்தி சபைக்கு 25 லட்சரூபாயில் இருந்து அதிநவீன Scanner வாங்கப்பட்டு தற்போது ஒவ்வொருவாரமும் ஞாயிற்றுக்கிழமையில் Scan சேவைகள், வைத்திய நிபுணர் Dr . சங்கரதாஸ் நிமலன் அவர்களினால் சிறந்த முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தின் கலையான செப்புத் தகட்டு புடைப்புச் சித்திரக் கலையை அழிய விடாது பேணும் நோக்குடன் யாழ். மாவட்ட தேசிய அருங்கலைகள் பேரவையால் அதற்கென ஒரு கழகம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்படும் வருடாந்த விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடிப் போட்டிகள் அல்வாய் மனோகரா விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றன.
வல்வை வாலாம்பிகை வைத்தீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் 12.03.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பதினைந்து நாட்கள் நடைபெறவிருக்கிறது. இந்த மகோற்சவத்தை அடியார்களுக்கு தெரிவிக்கும் முகமாக மாணிக்கவாசகர் பல்லக்கில் ஏறி வீதிகள் வழியாக ஊரிலுள்ள ஏனைய ஆலயங்களுக்கு சென்று வந்தார்.
சிவராத்திரி விழாவை முன்னிட்டு வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகத்தால்அணிக்கு இருவர் கொண்ட கடற்கரை கரப்பந்தாட்ட (Beach Volleyball) சுற்றுப் போட்டி நேற்று இரவு வல்வை காட்டுவளவு நேதாஜி கடற்கரையில் மின்னொளியில் நடாத்தப்பட்டது.
வர்த்தமானி அறிவித்தலின் படி வணிகக் கப்பத்துறைப் பணிப்பாளர் நாயக அலுவலக பதவி வெற்றிடங்களான பணிப்பாளர் (தரம் 1 பொறியியல் ), பணிப்பாளர் (தரம் 1 கப்பல் ) ஆகிய துறைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினரின், இசை மற்றும் ஓவிய பயிற்சி வகுப்புக்கள் ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெற்று வருகின்றது. இப் பயிற்சியினை மேற்கொள்வதற்காக குறிப்பிடக்கூடிய வல்வை மாணவர்கள் பயிற்சி வகுப்புக்களில் ஆர்வத்துடன் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் மாரியம்மன் உற்சவமானது முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்றுவருகிறது. இது வல்வெட்டித்துறை சிவன் கோவில் வருடாந்த திருவிழாவின் ஒரு தொடக்கமாக நடைபெற்றுவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட தொடர் இன்று திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில் இதில் ஆண்கள் மற்றும் பெண்களுகான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது.