நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையில் இன்று புதிய மாணவர்களுக்கான கால்கோள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் வருட மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு பூமாலை அணிவித்து வாண்ட் வாத்தியத்துடன் அவர்களை வரவேற்றனர்.
தொண்டமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டிகள் எதிர்வரும் 17.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு . இரா . ஸ்ரீ நடராசா அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
வல்வையர் பலர் கலைத்துறையில் சாதனைகளை படைக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு வரும் ஞாயிற்றுக்கிழமை 17/02/2013 அன்று வேம்படி,உடையாமணல் வீதியில் அமைந்துள்ள, கலாநிதி திரு.சபா. ராஜேந்திரன் அவர்களது இலவச கல்விக்கூடத்தில் வல்வை கலை கலாச்சார இலக்கியமன்றத்தினரால் இந்த இசை மற்றும் ஓவிய பயிற்சி பயிற்சிப்பட்டறை நடாத்தப்படவுள்ளது.
நெடியகாடு வடக்கு ஞானவைரவர் கோவிலின் எண்ணெய்காப்பு சாத்தும் விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த எண்ணெய்காப்பு சாத்தும் விழாவில் பல பக்தர்கள் கலந்து கொண்டு ஞான வைரவருக்கு எண்ணெய் வைத்து வழிபட்டனர்.
2013 ஆம் ஆண்டிற்காக பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மார்ச் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேலதிக செயலாளர் பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு நடைபெற்ற க. பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 2011/2012 ஆம் கல்வியாண்டுக்கான Z வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பாடத்திட்ட மாற்றத்திற்கு அமைவாக, Z வெட்டுப்புள்ளிகள் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்திற்கென தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
வல்வை சிவகுரு வித்தியாசாலையின் இல்லமெய்வன்மை போட்டிகள் யாவும் சிதம்பரா கல்லூரியின் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இல்லமெய்வன்மை போட்டிகளின் ஆரம்ப கட்ட போட்டிகள் தற்பொழுது கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA) ஒவ்வொரு மாத முடிவின் போதும் மாதாந்த செயற்பாட்டறிக்கை, கணக்கறிக்கை போன்றவற்றை வெளியிட்டுவருவது வழமை. இதன் அடிப்படையில் 2013 தை மாதத்திற்கான செயற்பாட்டறிக்கை நலன் விரும்பிகளினதும் பொதுமக்களினதும் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டுவரும் பெரு விழா தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று பெண்களுக்கான மென்பந்தாட்ட தொடர் கற்கோவளம் உதயதராகை விளையாட்டிக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட 2012ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்களுக்காக இரசாயனவியல் கல்லூரியினூடாக ( Institute of chemistry ) இரசாயனப் பட்டதாரியாக (Graduate Chemist of Chemistry ) வாய்ப்புண்டு.
வல்வை சிதம்பராக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் சனிக்கிழமை இன்று பி. ப 1.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு .கி. இராஜதுரை அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் , புதிய நிர்வாகசபை உறுப்பினர் தெரிவும் இன்று காலை பத்து மணியளவில், வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் அமைந்துள்ள வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தில் நடைபெற்றது.
வல்வை மாணவர்களின் கல்வியை அபிவிருத்தி செய்வதனை நோக்கமாகக் கொண்டு VEDA நிறுவனமானது 2011.02.07அன்று தோற்றம் பெற்றது. இன்று தனது மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் VEDA நிறுவனத்தின் பாரிய வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த அனைத்து வல்வையின் நலன்விரும்பிகளுக்கும் VEDA தனது நன்றியினை இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றது.
வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் 2013 ம் ஆண்டுக்கான இல்லமெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமாக இல்லங்களுக்கிடையிலான ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்திய மீனவர்கள் இலங்கை வடகடலில் மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக மன்னார் முள்ளிக்குளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட வடபகுதி மீனவர்களின் பாதையாத்திரையானது மன்னார் மற்றும் யாழ் கரையோரமாக நகர்ந்து, இன்று காலை தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை சந்தியினூடாக பருத்தித்துறையை நோக்கிச் சென்றது.
வல்வை சிதம்பராக் கல்லூரி கடினப் பந்தாட்ட அணி உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் , கல்லூரி மாணவர்களின் திறன்களை வளப்படுத்தும் விதமாக கல்லூரிச் சமூகத்தால் மாணவர்களின் துடுப்பாட்ட மற்றும் பந்து வீச்சு பயிற்சிக்கென வலைப்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இலங்கைப் பரீட்சைத் திணைக்களகத்தின் மூலம் நடத்தப்படும் நிறுவனம் சார் மற்றும் பாடசாலைப் பரீட்சைகளுக்கான இணைப்பு உத்தியோகத்தர் / பரீட்சை மேற்பார்வையாளர் பயிற்சிக் குழுமத்திற்கு உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்தல் தொடர்பான அறிவித்தல் ஒன்றை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
2012 இல் நடைபெற்ற க. பொ. த உயர்தரப்பரீட்சை முடிவுகள், யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு நேற்றைய தினம் தபால் மூலம் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில் பல்கலைக்கழக தேர்விற்கு தகுதி பெற்ற வல்வை மாணவர்கள் விபரம்.
சி
சிதம்பராக்கல்லூரி வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டிகள் எதிர்வரும் 09.02.13 சனிக்கிழமை அன்று பி. ப 1.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில், பாடசாலை அதிபர் திரு .கி. இராஜதுரை அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
இமையாணன் மத்திய விளையாட்டுக் கழகத்தினால் யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தப்பட்ட 10 ஓவர்கள் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி நேற்று திங்கட்கிழமை (04.02.2013) அன்று இமையாணன் மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் கழுகுகள் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து அளவெட்டி மத்திய விளையாட்டுக்கழகம் மோதியது.
வல்வெட்டித்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகாசபைப் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.02.2013) அன்று காலை முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்திற்கு முன்பாக நடைபெற்றது.
பத்தொன்பதுவயது பிரிவினருக்கிடையிலான உதைபந்தாட்டத் தொடரின் இறுதியாட்டம் இன்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் வல்வை உதய சூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து, வல்வை சைனீஸ் விளையாட்டுக் கழகம் மோதியது.
வல்வை மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று மதியம் பாடசாலைக்கு அருகாமையில் கடற்கரைப் பக்கமாக அமைந்துள்ள மகளிர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வல்வையின் பழமைவாய்ந்த ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் சம்பந்தமாக எமது இணைய தளத்தில் வெளியான செய்திகளையடுத்து இலண்டனில் வாழும் வல்வையின் நலன்விரும்பி ஒருவர் எமக்கு அனுப்பிய கிறிஸ்தவ தேவாலயம் பற்றி வல்வை மக்களுக்கு விடுத்த வேண்டுகோளும் கிறிஸ்தவ தேவாலய புனருத்தாரண விபரம் குறித்து புனித செபஸ்தியார் தேவாலயத்தின் நிர்வாகத்தினரின் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி வேலன் திருத்தலத்திலே தைப்பூசத் திருநாள் 27/01/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. வேலன் திருமுன்னிலையில் உரிய மண்டபத்திலே பூரண கும்பங்கள் ஓர் ஒழுங்கிலே வைக்கப்பட்டு பிரதம பூசகரால் அர்ச்சிக்கப்பட்டன. ஆறு வகை வில்வங்களாலும், பல்வகை மலர்களாலும் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப் பெற்றமை சிறப்பம்சம் ஆகும்.
பத்தொன்பதுவயது பிரிவினருக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரின் அரை இறுதியாட்டங்கள் இன்று வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. முதலாவது ஆட்டத்தில் வல்வை உதய சூரியன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழகம் மோதியது.
யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் 3ம் வருட நீதியியல் (Finance) மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து சுற்றுலா மேற்கொண்டு வல்வெட்டித்துறை, தொண்டமானாறு செல்வசந்நிதி ஆலயம், தொண்டமானாறு பெரிய கடற்கரை மற்றும் வல்வை பொது விளையாட்டு அரங்கம் போன்ற இடங்களுக்கு வருகை தந்தனர்.
2012 க. பொ . த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனைக்காக எதிர்வரும் 22ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தமது பரீட்சை விடைத்தாள்களை மீள்பரிசீலனைக்கு உட்படுத்த எண்ணம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.