எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலையொட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் ஒன்று தொண்டைமானாற்றில் இன்று மதியம் நடைபெற்றது. இன்று மதியம் 12:30 மணியளவில், தொண்டைமானாறு பிள்ளையார் கோவில் முன்றலில் நடைபெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற..........
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA - Valvai Educational Development Association) வல்வெட்டித்துறையில் தற்பொழுது தரம் 9 தொடக்கம் 11 வரையிலான தனியார் வகுப்புக்களை நடத்தி வருகின்றது. VEDA வை விரிவாக்கும் முயற்சியாகவும், வல்வை மாணவர்களின் தேவை கருதியும், தரம் 6, 7, 8 ஆம் ஆண்டுகளுக்கான வகுப்புக்களையும் ஆரம்பிப்பதில் தொடந்து முயற்சித்து வருவதாக தெரியவருகின்றது.
நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான திரு.M.K.சிவாஜிலிங்கம் சார்பில் நேற்று வல்வெட்டித்துறையில் பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. வீடு வீடாக திரு.சிவாஜிலிங்கம் அவர்களின் ஆதரவாளர்கள்..
கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிர்வேலாயுதசாமி ஆலயத்தில் நேற்று எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜீர்நோத்தாரண அஸ்டபந்தன கும்பாபிசேகத்தையொட்டி, கடந்த 9 ஆம் திகதி கும்பாபிசேக கிரியாரம்பம இடம்பெற்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் இன்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னனி பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதையொட்டி நேற்று யாழ்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த அறிவிப்பு வல்வெட்டித்துறையிலும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள வல்வை வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரர் கோவிலில் இன்று 'பிட்டுக்கு மண் சுமத்தல்' சிறப்புற நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் வரும் ஆவணி மூலத்தில் நிகழும் இந்த நிகழ்வு சகல சிவன் கோவிலிலும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வைகையாறு பெருக்கெடுத்த பொழுது,.....
கடந்த 10 ஆம் திகதி காலமான முதுபெரும் விளையாட்டு வீரரும், வல்வை விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவருமான திரு. சிவகுரு தாத்தா அவர்களின் மறைவையொட்டி, வல்வை விளையாட்டுக் கழகம் தமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கான புகையிரத சேவைகள் நாளை மறுதினம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேவைகள் பற்றிய நேர மற்றும் கட்டண விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தினசரி 3 புகையிரத சேவைகள் கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கும், எதிர் வழியாக கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்கும் நடைபெறவுள்ளன. அவைகளின் விபரங்கள் பின்வருமாறு,
வல்வெட்டித்துறையின் முன்னாள் விளையாட்டு வீரரும், சிறந்த நாடகக் கலைஞரும், ஓய்வு பெற்ற தபால் அதிபருமான திரு. அருணாசலம் இராமசாமி சிவகுரு (தாத்தா) அவர்கள் கடந்த 10 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் காலமாகியுள்ளார். இவருக்கு வயது 91. சிதம்பராவில் ஒரு நாடகத்தில் தாத்தா வேடத்தில் நடித்ததனால் தாத்தா என......
வதிரி நவசக்தி விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று வதிரி மொம்மஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் மாலை 04.30 மணியளவில் நடைபெற்றது.
சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) இன் சிதம்பரா கலை மாலை மற்றும் கணிதப்போட்டி பரிசளிப்பு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்பொழுது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) அறிவித்துள்ளது. இது சமந்தமாக சிதம்பரா நலன்புரி வலையமைப்பு (CWN) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா சென்றிருந்த "Florence C Robinson" எனப் பெயரிடப்பட்ட அன்னபூரணி எனும் பாய்க்கப்பல் அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தைச் சென்றடைந்ததின் 75 ஆவது வருட நிகழ்வு கடந்த 02 ஆவணி 13 ஆகும். இதனை முன்னிட்டு கடந்த 7 ஆம் திகதி கனடாவின் ரொரண்டோ நகரில் அன்னபூரணி 75 கலைத்...
வடஇலங்கைக்கும் தென்னிந்தியாவிற்குமான கடல் வழித்தொடர்பின் மையப்புள்ளிகளாக கருதப்பட்டவை வடஇலங்கையில் யாழ் தீபகற்பத்தின் வல்வெட்டித்துறையும், தமிழகத்தின் நாகபட்டின மாவட்டத்தில் அமைந்துள்ள கோடியாக்கரையும் ஆகும். வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன், கோடியாக்கரையிலிருந்தே படகினில் வல்வை வந்ததாக ஆலயத்துடன் சம்பந்தப்பட்ட வரலாறுகள் தெரிவிக்கின்றன
வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் தகவல் தொடர்பாடல் கல்வி நிலையத்தில் - ZICTEC (மந்திகை அருகில் புலோலி மெதடிஸ் மிஸன் தமிழ்க் கலவன் பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ளது) க.பொ.த(உ.த) பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான ஆங்கிலவகுப்புகள், கணினி பயிற்சி நெறிகள் (Ms Office, Desk Top Publising, Web Design, Hardware) நாளை ஆரம்பமபகவுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டிய சம்மாங்கோடு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்று காலை சுமார் 07:30 மணியளவில் வசந்த மண்டைப் பூசை இடம்பெற்றது. இதன் பின்னர் சுவாமி தேரினிலே காலி வீதி வழியாக, தற்பொழுது (13:00 மணி) கொழும்பு, வெள்ளவத்தையை வந்தடைந்துள்ளது.
ஊரெழு றோயல் விளையாட்டுக்கழகத்தினால் நடாத்தப்படும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி உரும்பிராய் இந்து கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 04.30 மணியளவில் நடைபெற்றது.
இச்சுற்றில் வல்வை விளையாட்டிக்கழகத்தை எதிர்த்து அராலி ஜேம்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.
வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கமானது (VEDA - Valvai Educational Development Association) ஒவ்வொரு மாத முடிவின் போதும் மாதாந்த செயற்பாட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை போன்றவற்றை வெளியிட்டுவருவது வழமை. இதன் அடிப்படையில் 2013 ஆவணி மாதத்திற்கான செயற்பாட்டறிக்கை பொதுமக்களினதும் மற்றும் நலன் விரும்பிகளினதும் கவனத்துக்கு வெளியிடப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டு விழாவின் இறுதிப் போட்டிகளும், நிகழ்வுகளும் நேற்று இரவு 11 மணியளவில் நிறைவு பெற்றது. நிகழ்வுகளின், செய்திகள் மற்றும் படங்கள் உட்பட்ட, முழுத் தொகுப்பும் கீழே இணைக்கப்பட்டுள்ளது
எமது இணைய தளமான Valvettithurai.org ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இலங்கையில் உள்ள வாசகர்களுக்கு அடுத்த படியாக அதிக வாசகர்களைக் கொண்டிருந்த ஐக்கிய இராச்சியம் (United Kingdom) கடந்த சில நாட்களில் வாசகர்களின் எண்ணிக்கையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. வாசகர் எண்ணிக்கையில் 3 ஆம், 4 ஆம் மற்றும் 5 ஆம் இடங்களிலுள்ள கனடா, இந்தியா மற்றும் அவுஸ்திரலியாவின் வாசகர் எண்ணிக்கையும் தொடர்ந்தும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.
வல்வெட்டித்துறை ரெயின்போ வி.கழகத்தின் 71 வது ஆண்டு விழாவின் இறுதிப் போட்டிகளும், நிகழ்வுகளும் இன்று பிற்பகல் 03:00 மணியளவில் ஆரம்பமாகி தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இல்லப் போட்டிகள் முடியும் தறுவாயில் தற்பொழுது பார்வையாளருக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. செய்திகள் மற்றும் படங்கள் Valvettithurai.org யினால் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டு விழாவின் இறுதிப் போட்டிகளும், நிகழ்வுகளும் இன்று பிற்பகல் 03:00 மணியளவில் வேவில் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாட்டின் பின்னர் ஆரம்பமாகியுள்ளது. விருந்தினர்கள் வல்வெட்டித்துறை வேம்படிச்........ (படங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன)
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டு விழாவின் இறுதிப் போட்டிகளும் நிகழ்வுகளும் இன்று நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 02:30 மணியளவில், ரெயின்போ விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கு அக் கழகத் தலைவர் திரு.முரளி அவர்கள் தலைமை தாங்குகின்றார்.
இந்து சமய கலாச்சார திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலைகளுக்கான அறிவுசார் பரீட்சையானது இன்று யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை நகரத்தை சுற்றியுள்ள 5 அறநெறிப் பாடசாலைகள் இதில் விண்ணப்பித்திருந்தன. மேற்குறிப்பிட்ட பரீட்ச்சைக்கு மாணவர் வரவு சுமார் 60-70% வரை இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ......
வல்வெட்டி வன்னிச்சியம்மன் கோயில் இன்று காலை 07.00 மணியளவில் வசந்தமண்டப பூசையுடன் தீர்த்தத்திருவிழா ஆரம்பமாகியது. அதன் பின் அம்மாள் 08.30 மணியளவில் ஊரணி தீர்த்தக் கடற்கரையை அடைந்து அங்கு தீர்த்தமாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக் கழகத்தின் 71 வது ஆண்டை முன்னிட்டு, அவ்விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவருகின்ற போட்டிகளின் வரிசையில் இன்று பார்வையாளருக்கான (வல்வை விளையாட்டுக் கழகத்துக்கு உட்பட்ட கழகங்களுக்கு உட்பட்ட) போட்டிகள் நடைபெற்றன. இன்றைய போட்டியின் இறுதி நிகழ்வாக இரு நபர்.....
யாழ் தீபகற்பகத்தின் வல்வெட்டித்துறை உள்பட்ட பல இடங்களில் நேற்றும், இன்றும் பரவலாக மழை பெய்து வருகின்றது. நேற்று இரவு வல்வெட்டித்துறையில் குறிப்பிடக்கூடிய மழை பெய்திருந்ததுடன் தற்பொழுதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகின்றது.
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 71 வது ஆண்டை முன்னிட்டு, அவ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவருகின்ற போட்டிகளின் வரிசையில் இன்று பார்வையாளருக்கான நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. நாளை இறுதி நிகழ்வுகள் கழக மைதானத்தில் பிற்பகல் 02:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 71 வது ஆண்டை முன்னிட்டு, அவ் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுவருகின்ற போட்டிகளின் வரிசையில் , இல்லங்களுக்கிடையிலான தெரிவுப்போட்டிகள், நேற்றும் வல்வை ரெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலையொட்டிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம் இன்று வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. வல்வெட்டித்துறை கப்பலுடையவர் விநாயகர் ஆலயத்தில் வணக்கத்துடன் ஆரம்பித்திருந்த இப்பிரச்சாரக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.இரா.சம்பந்தன்......
வல்வெட்டித்துறை ரெயின்போ விளையாட்டுக்கழகத்தின் 71 வது ஆண்டை முன்னிட்டு தற்பொழுது நடாத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. மேலும்....