ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 01/06/2026 (திங்கட்கிழமை)
அனைத்து அரச நிறுவனங்களிலும் (State institutions) ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் (Single use plastic water bottles ) கொள்வனவும் பயன்பாடும் இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளன. என அரசு அறிவித்துள்ளது.
இந்த உத்தரவு, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட விசேட சுற்றறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சுற்றறிக்கையின்படி, அரச நிறுவனங்களுக்குள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்க நிறுவனங்களின் தலைவர்கள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.