குட்டிமணி தங்கத்துரை சிலை - நான்காம் திகதி வரை தற்காலிக தடை
பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2026 (புதன்கிழமை)
1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி வெலிக்கடைச் சிறைக்கலவரத்தில் உயிரிழந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கதுரை மற்றும் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலைகளை வல்வையில் எதிர்வரும் 25 ஆம் திகதி திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவந்தன.
இந் நிலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தால் உருவச்சிலைகள் திறப்பு விழா ஏற்பாடுகளுக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆஜராகியிருந்தனர்
Comments will be edited (grammar, spelling and slang) and authorized at the discretion of Valvettithurai.org. The website also has the right not to publish selected comments.
எமது செய்திகளின் மறுபதிப்பினை எவரும் செய்ய முடியும், ஆனால் குறித்த எமது செய்திகளில் எதுவித மாற்றமும் செய்யாமல், எமது இணையதளத்தின் (www.valvettithurai.org) பெயரினைக் கண்டிப்பாக குறிப்பிடுதல் வேண்டும்.